ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

உன் நினைவுகளை நேசிக்கிறேன்
அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*

உரம் போட்டு
வளர்ப்பது
போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*

அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*

யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது

*

உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என
நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

கருத்துகள் இல்லை: