ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

தமிழ்மொழி





தடுக்கி விழுந்தால்
மட்டும் அ…ஆ…

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ…ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ…

ஐயத்தின்போது
மட்டும் ஐ….

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ…ஓ…

வக்கணையின் போது
மட்டும் ஒள

விக்கலின்போது
மட்டும் …..

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று


-நானில்லை


பெண்களின் முன்னேற்றம்



ஆண்களுக்கு பஞ்சமா என்ன ........??
நான் வேறு எதுவும் சொல்வதாயில்லை , நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .

நட்பு



துடிக்க மறுக்கும்
இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?

நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு

நீ
என்னை
நண்பனாக
ஏற்றுக்கொள்ளும் வரை
தொடர்கிறதடி.........






உன் நினைவுகளை நேசிக்கிறேன்




அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*

உரம் போட்டு
வளர்ப்பது
போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*

அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*

யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது

*

உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என
நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

கவிதையோடு வரும் கவலை என்ன இலவச இணைப்பா?




உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!

விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!

இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!

உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!

நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்

எப்போதோ பார்த்த உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்

சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்

சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?

பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!

கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?

காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்

நல்ல மரம் வளர
நீர் ஊற்று

நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.

உன் பிரிவு ....





தற்காலிகமான பிரிவுகளிலும் கூட
பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தையாய்
அடம் பிடித்திருக்கிறது என் மனசு....

நிரந்தரமானதோர் பிரிவிலோ
முதியோர் இல்லத்தில் தந்தையை
விட்டுச்செல்லும் மகனைப்போல
இரக்கமற்றதாக இருக்கிறது உன் மனசு...

கல்லென்று தெரிந்தும் கடவுளை
நம்பும் பக்தனை போல
பித்தனாயிருக்கிறது என் மனசு...