ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

நினைவுகளின் மணம்…உனக்காய் எரிந்துகொண்டிருக்கும்
நான் மெழுகுவர்த்தி அல்ல…
ஊதுபத்தி !

எரிந்தாலும் புகைந்தாலும்
கரைந்தாலும் கருகினாலும்
உன் நினைவுகளை மட்டுமே
மணமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறேன் !

என் எண்ணங்கள் மட்டும்
சாம்பலாய் விழுந்து கிடக்கின்றன
எனக்கான சுவடுகளாய்…

கருத்துகள் இல்லை: