ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 9 ஆகஸ்ட், 2008

1983 ஜூலை இனக்கலவரம்

தொடர்ச்சி...

பகுதி 04




1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் குண்டர்களால் இனவன்முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இனக் கலவரத்தின்போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அடங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது.

தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடமுடியும். இந்தக் கலவரத்தினால் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டவர்களால் என்றும் இந்தக் கலவரத்தை மறக்க முடியுமா?

1983க்கு பிற்பட்ட காலத்திலும் பல இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் வரலாற்றில் இருப்புக்கொண்டுள்ளன என்பதனை நாம் குறித்துக்கொள்ள முடியும்.


நிறைவுபெற்றது .

கருத்துகள் இல்லை: