ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

கொல்லாமல் விடமாட்டேன்இது 1883ம் ஆண்டு நடந்தது. ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.

அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்
தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.

சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டது!

கருத்துகள் இல்லை: