ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

புத்தகத்திற்குள்அமெரிக்க நாவலாசிரியை அன்னா பாரிஷ், ஒரு சமயம் தனது கணவருடன் ஒரு பழைய புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 'ஜேக் ஃப்ராஸ்ட் மற்றும் சில கதைகள்' என்ற புத்தகம் கைக்குக் கிடைத்தது. அதை எடுத்துத் தனது கணவரிடம் காண்பித்து, தான் சின்னவயதில் ஆசையோடு அந்தக் கதைப் புத்தகத்தைப் படித்ததாக சொன்னார்.

அவரது கணவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கி முதல் பக்கத்தைத் திருப்பினார். அதிசயம்! அதில் முதல் பக்கத்தில் அன்னா பாரிஷின் பெயர், பழைய விலாசம் எல்லாம் இருந்தது. அந்தப் புத்தகம் அவர் படித்த அதே புத்தகம்தான்!

கருத்துகள் இல்லை: