ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

அளந்து சிரியுங்க..வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்? வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.

ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு.

சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".

குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்.

அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)

கருத்துகள் இல்லை: