ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

குடிச்சாப் போகுமா துக்கம்?



குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.

இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது.

பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.

மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது.

2 கருத்துகள்:

செவத்தப்பா சொன்னது…

குடிம‌க்க‌ளெல்லோரும் இந்த‌ குடிய‌ர‌சு தின‌த்திலிருந்தாவ‌து, திருந்தி, தெளிவானால் ச‌ந்தோஷ‌ம்தான்! த‌ங்க‌ளுடைய‌ த‌க‌வ‌லுக்கு மிக்க‌ ந‌ன்றியும் வாழ்த்துக்க‌ளும்!

றிசாந்தன் சொன்னது…

நன்றி .

எனது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன் .