நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.
தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான்.
தாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், தொலைபேசி அடிக்கிறது, உங்கள் குழந்தை அழுகிறது, குழாயில் குடிநீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, மாடியில் காய வைத்த துணி மழையில் நனையத் துவங்குகிறது.
இதில் முதலில் நீங்கள் எதை எதிர்கொள்வீர்கள்?முடிவை மனதில் தேர்ந்தெடுத்துக் கொண்டு கீழே போங்கள், உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.
முடிவு செய்து வீட்டீர்களா?
நீங்கள் முதலில் தொலைபேசியை எடுத்துப் பேசியிருந்தால் உங்களது வாழ்வில் வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள்.
அல்லது உங்கள் குழந்தையை சமாதானம் செய்தால் உங்களது குடும்பத்திற்கே அதிக முக்கியத்துவம்.
ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்திருந்தால் உங்களது வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் தான் முன்னிலையில் இருப்பர்.
அதில்லாமல், மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணியை கொண்டு வந்திருந்தால், தாம்பத்ய வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீங்கள் வழிந்தோடிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தினால் பணம், சொத்து தான் உங்கள் முதல் குறிக்கோள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக