ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!


சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..!
'வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்' என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால் விடுவது அப்படி ஒன்றும் சுலபமல்ல..! புத்தாண்டு சமயங்களில் இது மாதிரி வசனங்கள் ரொம்ப பிரபலம்..!
நான் இன்றிலிருந்து சிகரெட் குடிப்பதில்லை என்று சொல்லி காலரை திருப்பிக்கொண்டு திரிவார்கள்..! எல்லாம் ஒரு வாரம் தாக்குபிடிப்பார்கள்..பின்பு மெதுவாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சொல்லி ஆட்டத்தை முடித்த இடத்தில் இருது தொடங்குவர்கள்..!
சிகரெட்டை நிறுத்துவதற்கு மன உறுதி மட்டும் அல்ல, வேறு உதவிகளும் தேவை. சிகரெட்டுக்கு மனிதர்கள் அடிமை ஆவது அதிலிருக்கும் "நிக்கோட்டின்" என்ற பொருளுக்காக தான். அந்த நிக்கோட்டின் நம் உடலை அதிகம் சேதப்படுத்துவதில்லை. நம் உடலை சேதப்படுத்துவது புகை தான்.
புகையை நிறுத்த நினைப்பவர்கள் உடனடியாக லைட்டர், மாட்ச், ஆஷ் ட்ரே எல்லாம் குப்பையில் எறிந்துவிட வேண்டும். புகைப்பிடித்தலை நினைவு படுத்தும் எதையுமே அருகில் வைத்திருக்க கூடாது(இது உங்கள் புகை நண்பர்களுக்கும் பொருந்தும்).
இரண்டாவது கட்டமாக நிக்கோட்டின் பொருள் கலந்த சூயிங்க் கம்களை உபயோகப்படுத்தலாம். உடல் நிகோட்டினுக்காக ஏங்கும் போது எல்லாம் இந்த கம்களை சாப்பிடலாம்.
நினைவில் கொள்ளவும்: புகை பிடித்தல் உங்களுக்கு மட்டும் அல்ல, அதை சுவாசிக்கும் அனைவருக்குமே( முக்கியமாக உங்கள் மனைவி, குழந்தை) ஆபத்தானது.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் கிடைக்கும் உடனடி நிவாரணம்:
1. உங்கள் மீதும் உங்கள் உடைகள் மீது அடிக்கும் கொடுமையான பயங்கரமான சிகரெட் நாற்றம்.
2. இருமல், மூச்சு வாங்குதல்
3. குடும்பத்தினரின் பாதுகாப்பு
4. இதயத்துக்கு சற்று ஓய்வு
5. தேவை இல்லாத பண விரயத்தை தடுப்பது
நீண்ட கால நிவாரணம்:
1. நுரையீரல் புற்று நோயை தடுக்கலாம்
2. இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்
3. முக்கியமாக உங்கள் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து காப்பாற்றலாம்(புகைக்கும் பழக்கும் இருக்கும் பெற்றோர்களை கொண்டிருக்கும் குழந்தைகளில் 80% வரை புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்)
4. முக சுருக்கத்தை குறைக்கலாம்
5. உங்கள் ஆயுளை அதிகமாக்கலாம்.

கருத்துகள் இல்லை: