ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

நட்பு தின வரலாறு!


ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன?
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.
இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகைநட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.
அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும்,
மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும்,
சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும்,
பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் நமக்கு தேவையில்லாதது என்றாலும் தெரிந்து கொள்வோமே...

கருத்துகள் இல்லை: