ஆங்கிலம் பொருளாதார வாழ்வுக்கு தேவையானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் ஆங்கிலம் ஒரு மொழிதான். அறிவு தொடர்பான விஷயம் அல்ல.
ஆங்கிலம் தோன்றா முன்பே, அதுவே இல்லாமலும் நம்மவர்கள் இலக்கியம் என்ன வரலாறே படைக்க முடிந்திருக்கிறது. இன்னமும் முடியும்.எனக்கே கொஞ்சநாள் முன்பு கூட, ஆங்கிலத்தில் யோசித்தால் எனக்கு முளையே கிடையாதோ என்றெல்லாம் எண்ணம் வரும். அவசியம் இல்லை.
தொடர்பு மொழிக்குத்தான் ஆங்கிலமே தவிர வேறேதுக்கும் அல்ல.
நான் பார்க்கும் ஒரு சிலருக்கு கோபம் வந்தால் ஆங்கிலதில்தான் வரும். பேச தவிர்க்கும் ஒரு சிலர் ஆங்கிலதில்தான் பதில் சொல்லுவார்கள்.
இருவருக்கும் இடையிலான வித்தியாசங்கள் கூட ஆங்கிலத்தால் அளக்கப்படுகின்றன.இந்தமாதிரி எல்லாம் அதை கட்டி அழுக வேண்டியதில்லை.
"English is a language, not a knowledge"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக