ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

என்ன செய்கிறாய் என்னை …நீ கொடுத்த கடிதங்கள், பரிசுப்பொருட்கள்…
நாம் இதுவரை சந்தித்த நாட்கள்…
போட்ட சண்டைகள்…
என்று அனைத்தையும் கணக்கு தவறாது
சின்னக் குழந்தை தனது மிட்டாய்களை
எண்ணி எண்ணிப் பார்ப்பதைப்போல
கணக்கு வைத்திருக்கிறேன் எனக்குள்ளே !

இந்த பொல்லாத முத்தங்களை மட்டும்
எப்பொழுதும் எண்ணிவிட முடிவதில்லை…
ஹேய்... அப்பொழுது மட்டும்
என்னை என்ன செய்கிறாய் நீ…


கருத்துகள் இல்லை: