ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்




லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு
7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள்.

உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.

காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

கருத்துகள் இல்லை: