ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

துன்பம் வரும் வேளையில் நட்பின் ஞாபகம்!



உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இ‌ந்த ஆ‌ண்டு 3ஆ‌ம் தே‌தி ந‌ட்பு ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்போகிறோம்.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌த் ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள், மனை‌வியை‌விட நமது து‌க்க‌த்‌‌திலு‌ம், ச‌ந்தோஷ‌த்‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்வ‌தி‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கினறன‌ர். தா‌யிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம் ஏ‌ன் த‌ந்தை‌யிட‌ம்கூட ஆலோசனை செ‌ய்ய முடியாத ‌சில ‌விஷய‌ங்களை ‌ந‌ண்ப‌ர்களுட‌ன் கல‌ந்துரையாடுவத‌ன் மூல‌ம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம்.அ‌த்தகைய ‌சிற‌ப்பு ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் உ‌ண்டு.

உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. த‌ற்போதை வேகமான ந‌வீன காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை நாடக‌ங்க‌ளிலு‌ம், ‌‌திரை‌ப்பட‌ங்க‌ளிலு‌ம் ந‌ட்பை மையமாக வை‌த்து பல கதைக‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்று‌ள்ளது.

சாதி, இ‌ன‌‌ம், மொ‌ழி பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு‌வரு‌ம் இ‌ந்த நண்பர்கள் ‌தி‌ன‌த்‌‌தி‌ல், தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் ந‌ண்பா உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது அவ‌ர்க‌ள் ஞாப‌க‌ம் வருதே... ந‌ண்பா ஞாபக‌ம் வருதே... ப‌ள்‌ளி‌க் கால‌ங்‌க‌ளி‌ல் நா‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌ந்து சு‌ற்‌றியது. ஆ‌த்த‌ங்கரை‌யி‌ல் ‌சிறு வய‌தி‌ல் க‌ல் எ‌றி‌‌ந்து ‌விளையாடியது. மா‌ந்தோ‌ப்‌பி‌ல் மா‌ங்கா‌ய் ப‌றி‌த்து ‌தி‌ன்ற சுவையான நா‌ட்க‌ள் எ‌ன்று பழைய ‌நினைவுகளை ‌நி‌னை‌த்து‌ப் பா‌ர்‌‌த்து பூ‌ரி‌ப்படைவா‌ர்க‌ள்.ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌த்‌தி‌ல்... நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்க வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌‌ள் ஒருவரை ஒருவ‌ர் க‌ட்‌டி‌த்தழு‌வி த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

தொலைதூர‌த்‌தில இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு செ‌ல்பே‌சி வ‌ழியாக குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்‌பியு‌ம் (எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.), க‌ணி‌னி வ‌ழியாக ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்‌பியு‌ம் த‌ங்க‌ள் ந‌ட்பை பல‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோமோ... இ‌ல்லையோ... உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது.

இதுநா‌ள் வரை‌யிலு‌ம், ந‌ண்ப‌ர்களே எ‌ன‌க்கு இ‌ல்லை எ‌ன்று யாரு‌ம் கூ‌றி‌‌விட முடியாது. இ‌ந்த ந‌ட்பு ‌‌தின‌த்‌தி‌ல் மு‌த்து‌க்க‌ளி‌ன் ‌சிதறலா‌ய் நமது ‌பு‌ன்னகை ந‌ம்மையு‌ம், இ‌ந்த உலகையு‌ம் ‌நிறை‌க்க‌ட்டு‌ம்.

கருத்துகள் இல்லை: