ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

காதல்


'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை.
அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்தனை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட.
நீ அன்பு காட்டாவிட்டால் என்ன? நான் அன்பு காட்டுகிறேன், அக்கறை காட்டுகிறேன், காதலிக்கிறேன் இப்படித்தான் சொல்லும் அந்த பிரதிபலன் பார்க்காத காதல் உள்ளம். என் கண்ணின் இமைகளில் வைத்துத் தாங்கிக் கொள்வேனடி(டா) இவ்வாறாக உருக வைக்கும் காதல்.
ஆனால், தற்போதைய காதல்'கள்' (ஒரு சில காதல் தவிர்த்து) இப்படித்தான் உள்ளனவா? காதல் மாதம், மயிலிறகு மாதம் எல்லாம் சரிதான். காதல் காதலாக இருக்கிறதா இப்போது??காதலின் அடிப்படையே பிறழ்ந்து போயிருக்கும் இக்காலத்தில் எங்கு போய்காதலைத் தேடுவது? கடற்கரையிலா? இல்லை பூங்காக்களிலா? அங்கெல்லாம் போனால் காதல் கிடைக்காது.........
போதாக்குறைக்கு இந்தமீடியாக்கள் வேறு. உங்க காதலன்/காதலிக்கு என்ன பரிசு தரப்போறீங்கன்னு 'கொஞ்சும் தமிழ்'ல தொ(ல்)லைபேசுவாங்க. அப்புறம் இந்தக் கலர் உடைஅணியுங்க, இப்படி பேசுங்க உங்க 'அவங்க' கிட்டன்னு இலவசமா அறிவுரை வேறகிடைக்கும்.
அணியும் உடைகளின் நிறத்தில் தானா காதல் வாழ்கிறது. அப்படி என்றால், அதேகலரில் வருஷம் பூராவும் போட்டுட்டு இருக்கலாமே. ஏதோ அந்த ஒருநாள் மட்டும்தான் காதலை தூக்கி நிறுத்தப் போவதாகப் பேசிக்கொள்வார்கள் எல்லாரும்.
'எங்கு காணினும் காதலடா' என்று கையில் ஒரு ரோஜாப்பூவை தூக்கிக் கொண்டு (அது ஏங்க ரோஜா? ஏன் வேற பூ கொடுத்தா ஒத்துக்க மாட்டாங்களா) தனக்கான ஜோடியைத் தேடிக் கிளம்பிடுவார்கள் பையன்களும் பொண்ணுங்களும்.
கேட்டால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தத்தான் இப்படி என்பார்கள். அந்த அன்பை ஒவ்வொரு நிமிஷமும் வெளிப்படுத்தணும். அதுக்குன்னு ஒரு தனிநாள் தேவை இல்லையே. அந்தநாளில் காதல்ங்கற பேர்ல செய்யும் அட்டகாசங்கள் இருக்கிறதே......... தாங்காது.
பார்ப்பவர்களிடம், பேசுபவர்களிடம் எல்லாம் காதல் வராது. அது யாராவது ஒருத்தர் மேலதான் வரும். அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. அந்த அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்.
இந்த நிமிஷம் கோபப்பட்டு அடுத்த நிமிடம் மெழுகாய் உருகிக் கரைவது தான்காதல். காத‌ல‌ர்க‌ள் சேர்ந்திருந்தாலும் ச‌ரி, பிரிந்தாலும் ச‌ரி.உண்மைக்காத‌ல் என்றும் உயிர்ப்புட‌ன் இருக்கும். காத‌லும் தாய்மையும்ஒன்றுதான். அடித்தாலும் அணைத்துக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை: