ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

கோபப் பரிசு
யார் மீதோ கொட்டமுடியாத
உன் கொந்தளிப்புகளை எல்லாம் என்மேல் ஏற்றி…

ஒட்டுமொத்த கோபத்தியும் வார்த்தைப் புயலாக்கி
என்மேல் எறிகிறாய் !

அதற்குக்கூட உனக்கு உரிமையானவன்
நானென்பதால்அதிலிருந்து எனக்கான
தென்றலை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் !

கோபம் தணிந்தபின் நீ வந்து கெஞ்சும்
கொஞ்சல்களுக்கு பரிசளிக்க அவை தேவைப்படும்…

கருத்துகள் இல்லை: