ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

அறிவுள்ள அமெரிக்கா




அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி செயற்கைக்கோளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய முடிவு செய்தது.அப்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை.என்னவென்றால் செயற்கைக்கோளில் உள்ள சர்க்கியூட்களைக் காகிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் விண்வெளியில்தான் ஈர்ப்புவிசை கிடையாதே!.பிறகு எப்படி பேனாவில் இருந்து மை கீழே இறங்கும்? எப்படி காகிதத்தில் எழுதுவது? ஆகவே இதற்கென சிறப்புப் பேனாவை அமைக்க குழு அமைக்கப்பட்டது.

சில மாதங்களில் அவர்களும் விண்வெளியிலும் செயல்படும் பேனாவை வடிவமைத்தார்கள். விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க வீரர்களும் அந்தப் பேனாவை உபயோகித்தார்கள். அமெரிக்காவும் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டதாம்.

ரஷ்யாவும் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடிவு செய்தபோது இந்த விண்வெளியில் எழுதும் பேனாப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேனாவுக்கென குழு எதுவும் அமைக்கவில்லை.ஏனென்றால் அவர்கள் கொண்டு சென்றது பென்சில்.

கருத்துகள் இல்லை: